மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி ரஸ்யாவிற்குள் உள்ள இலக்கொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் எஸ்300 ஏவுகணை அமைப்பினை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவிற்குள் எஸ் 300 ஏவுகணை அழகா எரிந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் அமைச்சர் தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்கு மேற்குலகம் அனுமதிவழங்கியதை தொடர்ந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கார்க்கிவ்விற்கு அருகில் உள்ள ரஸ்ய பிரதேசங்கள் மீது உக்ரைன் தாக்குதலை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தாங்கள் வழங்கிய ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த கட்டுப்பாடுகளை மேற்குலக நாடுகள் தளர்த்தியுள்ளன.
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டதா என்பது தெரியவரவில்லை.
ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதிவழங்கியதை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.
இது தன்னுடைய படையினர் கார்கிவ் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.