ஹற்றன் – கொட்டகலை பகுதியில் இலவச மருத்துவ முகாம்

0
120

ஹற்றன் – கொட்டகலை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர். இதன்போது, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டது.