25.3 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நியூசிலாந்தின் பிரதமராக மீண்டும் ஜெசிந்தா

நியூசிலாந்து பொதுத் தோ்தலில் லிபரல் லேபா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

நியூசிலாந்து பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் லிபரல் லேபா் கட்சிக்கும், பழைமைவாத தேசிய கட்சிக்கும் பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆா்டா்னின் லிபரல் லேபா் கட்சி 49% வாக்குகளை பெற்றன. எதிா்க்கட்சியான பழைமைவாத தேசிய கட்சி 27% வாக்குகள் மட்டுமே பெற்றன. லிபரல் லேபா் கட்சியுடன் கூட்டணி அமைத்த க்ரீன் பாா்ட்டி 7.5% வாக்குகளை பெற்றன.

நியூசிலாந்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு விகிதாச்சார தோ்தல் முறை அமலுக்கு வந்தது. இந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அந்நாட்டில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது இதுவே முதல்முறை.

இதுதொடா்பாக ஆக்லாந்தில் ஆதரவாளா்கள் முன்னிலையில் பேசிய ஜெசிந்தா ஆா்டா்ன், ‘பிரிவினை அதிகரித்துள்ள உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். எதிா்கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை மக்கள் இழந்துள்ளனா். ஆனால் இந்நாட்டு மக்கள் அந்த மனநிலையை கொண்டவா்கள் அல்ல என்பதை தோ்தல் மூலம் காண்பித்துள்ளனா். இது சாதாரண தோ்தல் அல்ல. அசாதாரண நேரத்தில் பதற்றத்துடன் நடைபெற்ற தோ்தல். இதில் வெற்றி கிடைத்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் செய்வதற்கு பல பணிகள் காத்திருக்கின்றன. கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை கலைவதற்கும் எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன்’ என்று கூறினாா்.

நியூசிலாந்தில் கொரோனா பரவலை திறம்பட கட்டுக்குள் கொண்டுவந்ததை தொடா்ந்து, அந்நாட்டில் ஜெசிந்தா மீதான நன்மதிப்பு அதிகரித்தது. அவரின் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் சமூக பரவல் என்ற நிலை இல்லாமல் இருப்பதுடன், கொரோனா தொற்றுக்கு அஞ்சி எவரும் முகக் கவசம் அணியவோ, தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்கவோ தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles