பொலிஸாரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை!

0
206

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து மேல் மாகாணத்தை விட்டு வௌியில் செல்வதை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை சிலரின் செயற்பாட்டால் பூரண பலனளிக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (30) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் தான் மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிவித்தலை முன்கூட்டியே தெரிவித்தாகவும் அதனை சிலர் வேறு விதமாக பயனபடுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் காணப்பட்ட வாகன நெரிசல் மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.