மட்டக்களப்பு ஏறாவூர், 15ம் கிராமத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு இலவச அரசி பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக நாடளாவிய ரீதியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பங்கேற்றிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர மௌலானா, தேசிய காங்கிரஸ் மாவட்ட இணைப்பாளர்எம்.எம்.ஹனிபா, பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில்கலந்துகொண்டனர்..