30 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டு கழக மைதானத்தில் உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிப் போட்டியில், சுவியர் அணி கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.


இரண்டாம் இடத்தினை மரியா கழக அணியினரும், மூன்றாம் இடத்தினை லோயலா கழக அணியினரும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த 44 வருடமாகச் செயற்பட்டுவரும், கழகத்தின் மூத்த உதைப்பந்தாட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் தற்போதய இளம் உதைப்பந்தாட்ட வீரர்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இச் சுற்றுப் போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.


அணிக்கு 9 பேர் கொண்டதாக 6 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள், இக்னேசியஸ் விளையாட்டு கழக தலைவர் கஸ்டன் அன்றாடோ தலைமையில் இடம்பெற்றது.


பிரதம அதிதியாக இயேசு சபை மேலாளர் அருட்பணி சகாயநாதன் அடிகளார் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக புனித இன்னாசியார் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார், அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார், கல்லடி 243வது இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி கேணல் சந்திம குமாரசிங்க, சமுர்த்தி உத்தியோகத்தர் மைக்கல் குளோடியா, கிராம சேவை உத்தியோகத்தர்களான மன்மதன் மற்றும் கோவர்த்தினி உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் விக்டர் என்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மூத்த உதைப்பந்தாட்டட வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 18 வயதுக்குட்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்களும் விருதுகளும் பண பரிசுகளும் வழங்கி கௌரவிக்கபபட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles