29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரிக்கான கொடியேற்றும் நிகழ்வு

மட்டக்களப்பு காத்தான்குடி பதிரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் வருடாந்தோறும் இடம் பெற்று வரும் அஜ்மீர் ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்களின் பெயரிலான கந்தூரி நிகழ்வின்
38 வது வருட கந்தூரி நிகழ்வுக்கான ஆரம்ப நாள் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.
காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி
நிகழ்வு இடம்பெற்றது
இதில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கே.குலதுங்க, இந்திய தூதரகத்தின் கொன்சிலர் சன்சீவ் அரோரா,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், மட்டக்களப்பு கல்லடி 243 வது ராணுவ முகாம் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திமால் குமார் சிங்க
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
தேசியக் கொடி மற்றும் கந்தூரி கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம் உட்பட உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
பிராத்தனை நிகழ்வும் இடம் பெற்றது.
தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு மௌலூது மற்றும் மார்க்க உரைகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று, எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அன்னதானம் வழங்கப்பட்டு
கந்தூரி நிறைவு பெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles