28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
கடந்த மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் பெருவிழா ஆரம்பமானது.
இன்றைய தினம் பகல் கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று வண்ணக்குமார்கள் பாரம்பரிய நடைமுறைகளுடன் பிள்ளையார் மற்றும் தான்தோன்றீஸ்வரர் தேரடிக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு தேர்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.


இதன்போது பிள்ளையார் தேர் முதலாவதாக இழுத்துச்செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் இந்த தேர் இழுத்துச்செல்லப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் தான்தோன்றீஸ்வரர் அமர்ந்துள்ள தேருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு பக்கமாக நின்று வடமிழுத்தபோது தேர் வடங்கள் ஆறு தடவைகள் அறுந்த நிலையில் இறுதியாக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் தேர் நகர்ந்துசென்றது.


அதனை தொடர்ந்து இரண்டு தேர்களும் ஆலய முன்றிலுக்கு பக்தர்களினால் இழுத்துவரப்பட்டதை தொடர்ந்து தேர் உற்சவம் நிறைவுபெற்றது.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் தேரோட்ட உற்சவத்திருவேட்டை திருவிழா இன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles