மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு இவ் வருட இறுதிக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில்
இன்று மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான
நளின் பண்டார, இம்ரான் மஹ்ரூப், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அமீர் அலி, உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்
உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
