27.4 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மொத்த தேசிய வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை

8.3 வீதமாக உள்ள மொத்த தேசிய வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் 2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டினை சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன், உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார கொள்கையினூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்பம் வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.

புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.

52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.

பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.

இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles