அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வீட்டில் இருந்தவாறே முன்னெடுப்பதற்கான மாணவர் மகிமை எனும் செயற்திட்டத்தை நிந்தவூர் பெஸ்ட் ஓப் யங் சமூக சேவைகள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய முதற்கட்டமாக தரம் 4, தரம் 5, தரம் 10, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான செயலட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான செயலட்டைகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பறூசா நக்பர், அதிபர் எம்.எச்.எம் றாபிஉ விடம் கைளித்தார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் ஆயுர் வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.ஏ.நக்பர், அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது, பொருளாளர் எஸ்.ஏ.பாசித், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கே.எல்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.