26.2 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒரு வரை நிறுத்துவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடந்துவரு கின்றன. தேர்தலைப்
பகிஷ்கரிப்பது என்பது ஒருவரை வெல்ல வைப்பதற்கானது என்றும் பொது வேட்பாளர் என்பது அப்படியல்ல எனவும் அண் மையில் ‘ஈழநாடு’ ஆசிரியர் தனது தலையங்கம் ஒன்றில் விபரித்திருந்தார். அதுகுறித்து அறிந்துகொள்ள விரும்பிய நண்பர் ஒருவர், ‘பகிஷ் கரிப்பதால் மாத்திரமல்ல, பொது வேட்பாளரை நிறுத்தினாலும் ஒரு வேட்பாளர்தானே பயன்பெறுவார்’, என்று வாதிட்டார்.
இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தேர்தலில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பகிஷ்கரிக்கக் கோரியதால் ரணிலுக்கு கிடைக்க விருந்த வாக்குகள் அவருக்குக் கிடைக்காமல் விட்டன. அதனால் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
அதேபோல, அந்தத் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகள் பொதுவேட்பாளருக்கு கிடைத்திருந்தாலும் மகிந்த
ராஜபக்ஷதானே அதே ஒரு இலட்சம் வாக்குகளால் வெற்றிபெற்றிருப்பார் என்ற அவரின் வாதம் கேட்கின்ற போது சரியாகத்தான் இருந்தது.
ஆனால், அப்படியல்ல என்று நண்பருக்கு விளக்கமளிக்க வேண்டி யிருந்தது. அந்தத் தேர்தலில் மகிந்த ராஜ பக்ஷ பெற்ற வாக்குகள் 48 இலட் சத்து 87 ஆயிரத்து 152. ரணில் விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 47 இலட்சத்து 6 ஆயிரத்து 368. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 95 இலட்சத்து 93 ஆயிரத்து 520. வெற்றிபெற எடுக்கவேண்டியது 47 இலட்சத்து 96 ஆயிரத்து 760 வாக்குகள்தான்.
மகிந்த ராஜபக்ஷ ஐம்பது வீத வாக்குகளிலும் பார்க்க அதிகம் பெற்றார் – வெற்றிபெற்றுவிட்டார். அதாவது, தேர்தல் பகிஷ்கரிப்பு அவருக்கு நேரடியாக உதவியிருக்கின்றது. ஆனால், அந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பளர் ஒருவரைக் களம் இறக்கியிருந்தால் அவர் ஆகக் குறைந்தது இரண்டு இலட்சம் வாக்குகளையே பெற்றி ருப்பார். என்றாலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 97 இலட் சத்து 93 ஆயிரத்து 520 சக (10) 2 இலட்சம் மொத்தம் 97 இலட்சத்து 93 ஆயிரத்து 520 ஆகியிருக்கும். இப்போது ஒருவர் வெற்றிபெற தேவையானது 48 இலட்சத்து 96 ஆயிரத்து 760 வாக்குகள்.
ஆனால், மகிந்த பெற்ற வாக்குகளோ 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகள்தான். அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது. இரண்டா வது சுற்றுக்காக வாக்குகளில் யாரா வது தமது இரண்டாவது தெரிவாக யாரையேனும் தெரிவு செய்திருக்கிறார்களா? என்பது கணக்கிடப் பட்டிருக்கும்.
அப்போது, தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த வர்கள் தமது இரண்டாவது தெரிவாக ரணிலுக்கு வாக்களித்தால் அவர் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது அவர் ஜனாதிபதி யாக வருவதற்காக அல்ல என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட முடிவுதான். ஆனால், மக்கள் தமது விருப்பப்படி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தாம் விரும்பிய ஒருவரை தெரிவுசெய்யவும் நாம் சந்தர்ப்பம் கொடுத்தால் அது யார் என்பதையும் அவர்களே தத்தம் விருப்பத்துக்கு விட்டுவிடவேண்டும்.
அப்படி விடுகின்றபோது அவர்க ளின் விருப்பமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கும். இரண்டாயிரத்து பதினைந்தில் நேரடியாக மைத்திரிபால சிறிசேன வுக்கு நாம் வாக்களித்திருந்தபோதிலும் அது மாத்திரமே அவரின் வெற்றிக்கு உதவியது என்று வாதிடு வதைவிட மேலே நமது விருப்பு வாக்கின் மூலம் மட்டுமே தெரி வாகின்றபோது அவருக்கும் ஒரு கடப்பாடு அவரை அறியாமலே வந்துவிடலாம்.!
நண்பருக்கு இதனை விளக்க மளித்தபோது அவர் திருப்தியுடன் அழைப்பிலிருந்து விடுபட்டார். அந்தத் தேர்தல் நடைபெறுவ தற்கு முன்னதாக ரணில் பிரதமராக இருந்தபோது தொடங்கிய சமாதானப் பேச்சுகளை முறிக்கவேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் ஒரே இலக்காக இருந்திருக்கவேண் டும். அதனால்தான் அவர்கள் அவரைத் தோற்கடிக்க பகிஷ் கரிப்பை கையில் எடுத்தார்கள்.
தாம் விரும்பிய ஒருவரை தோற்கடிப்பது என்பதும் மற்றையவரை வெல்ல வைக்கவேண்டும் என்பதும் ஒன்றா னதே. அதனால்தான் இப்போது பகிஷ்கரிக்கவேண்டும் என்பவர்கள் எதற்காக அதனை முன்வைக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள அரசியலில் கலாநிதி பட்டம் எல்லாம் தேவையில்லை. இன்று ஜே. வி. பி. வெற்றி பெறவேண்டும் என்று இந்த நாட்டில் தீவிரமாக பணியாற்றுப வர்கள் யார் என்பதும் ஒன்றும் இரகசியமானதல்ல.
சீனாவின் செல்லப்பிள்ளைகளான அவர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்காது என்பதும் தெரிந்ததுதான். வடக்கில் பாராளுமன்றத் தேர்தலில் சில நூறு வாக்குகளைப் பெற்ற அவர்களுக்கு அந்த ஜனாதிபதித் தேர்தலில் சில ஆயிரங்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். தமிழ் மக்களை அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதைவிட, தேர்தலை பகிஷ்கரி யுங்கள் என்று கேட்பது அவர்களுக்கு உதவும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்ததுதான்.
பொது வேட்பாளரை களம் இறக்கவேண்டும் என்பவர்களுக்குப் பின்னால், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கூறுபவர்கள் இந்த பகிஷ்கரிப்பின் பின்னால் சீனா இல்லை என்பதையும் அல்லவா நிரூபிக்கவேண்டும்.! அதனால்தான், பொது வேட்பா ளர் போட்டியிட வேண்டும் என்று வாதிடுபவர்கள் அனைவருமே பகிஷ்கரிப்புக்கு எதிராகக் கருத்துக் கூறிவருகின்றனர்.

  • ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles