30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

ஒருவன் தனது குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான். அவன் ‘ஐயோ’ என்றால் குதிரை நிற்கும். ‘அப்பாடா’ என்றால் ஓடும். ஒருநாள் மலைப்பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதற்றத்தில் – குதிரையும் தறிகெட்டு ஓட – அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான். குதிரை வெகுவேகமாக ஒரு பள்ளத்தாக்கின் முனையை நோக்கி ஓடியது. எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் , ‘ஐயோ’ என்றான். உடனே குதிரை நின்றது.

மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக ‘அப்பாடா’ என்றான். மறுநிமிடம் குதிரை பள்ளத் தாக்கில் பாய்ந்தது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்குவதற்காக கடுமையாக உழைத்துவரும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தமது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளித்து வருகின்றனர்.

அமைதியாக அவர்கள் தமது முயற்சியை செய்துகொண்டிருக்க, அந்த வேட்பாளரை தோற்கடிக்கிறேன் பார் என்று ‘வீரசபதமெடுத்து’ உழைத்துவரும் சிலர் எங்கெல்லாம் அரசியல் கருத்தரங்கு நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று தமது விருப்பத்தை நிறைவேற்றி வருகின்றனர். அண்மையில், ஒரு கருத்தரங்கில் அழையாவிருந்தாளியாக நுழைந்த நமது மக்கள் பிரதிநிதி ஒருவர், அந்தக் கூட்டத்தில் பொதுவேட்பாளருக்கு எதிரான கருத்துகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததுடன் அதுபற்றிய தகவல்களையும் தனது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டு ‘இன்பம்’ அடைந்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் அவர் ‘மாபெரும்’ கூட்டம் நடத்துவதற்கு முன்னர், தொடர்ந்து அதுபோன்ற கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தப்போவதாக அறிவித்திருந்த வர்கள், இப்போது யாராவது நடத்துகின்ற கூட்டங்களில் பிரசன்னமாகி தமது விருப்பத்தை நிறைவுசெய்து கொள்வதை காணமுடிகின்றது. அதுவல்ல, இன்று நாம் சொல்லவருவது. ஒரு காலத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க நினைப் பவர்கள் முதலில் தொடங்குவது தமக்கென்று ஒரு தொலைக் காட்சியைத்தான்.

டாக்டர் ராமதாஸின் மக்கள் ரீ. வி. முதல், விடுதலை சிறுத்தைகளுக்கென்று தமிழன் ரீ. வி. வரை கட்சிகளுக்காகவே கட்சிகளாலேயே தொடங்கப்பட்டவை. தி. மு. கவுக்கு கலைஞர் ரீ. வி., அண்ணா தி. மு. கவுக்கு ஜெயா ரீ. வி. என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சி உண்டு. அதேபாணியில் நம்மவர்களும் தமக்கென்று ஓர் ஊடகத்தைத் தொடங்க முயற்சிக்கின்றனர் அல்லது இருக்கின்ற ஊடகங்களைத் தமக்கு ஆதராக செயல்பட வைக்க முயற்சிக்கின்றனர்.

இப்படித்தான் அண்மையில், நம்மவர் ஒருவரை – அவரின் அரசியல் முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காகவே கனடாவிலிருந்து ஓர் அமைப்பின் நிதி உதவியுடன் ஓர் இணையப் பத்திரிகை தொடங்கப்பட்ட சங்கதி வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. மாதந்தோறும் அந்த இணையப் பத்திரிகையை தனி ஒருவராக இருந்து நடத்துவதற்காக அவருக்கு ஆறு இலக்கங்களில் சம்பளம், பத்திரிகை வடிவமைப்பாளருக்கு சம்பளம், அலுவலக வாடகை என்று சில இலட்சங்களை மாதந்தோறும் வழங்கி வருகின்றதாம் ஒரு கனடிய தமிழர் அமைப்பு. அவர்களின் நோக்கம் ஒன்றுதான்.

தாம் நம்புகின்ற ஓர் அரசியல்வாதியை பற்றி அவர் பெருமைகளைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். அவர் செய்கின்ற ‘வேலைகளால்’ தமிழ் இனத்துக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. அவர் செய்வது எதுவானாலும் அதுபற்றி புகழ்ந்து அல்லது அதுவே சரியானது என்று எழுதவேண்டும் என்பது மட்டுமே அவர்கள் விதித்துள்ள நிபந்தனை.

இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட போது அந்தச் சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்லாட்சி அரசாங்கத் தின்போது, தான் தயாரித்த ‘எக்க ராஜ்ய’ தீர்வுப்பொதியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களிடம் அதனை விற்பதற்காக தனி ஓர் ஆளாக தமிழ் அரசின் எம். பி. சுமந்திரன் போராடிக்கொண்டிருந்த காலம். சுமந்திரனே யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய நமது ஊடக ஜாம்பவான் வித்தியாதரன் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் இந்தத் தீர்வுப் பொதியைப்பற்றி அல்லது அதிலுள்ள நல்ல விடயங்களைப் பற்றி வெளியே மக்களுக்கு சொல்வதற்கு உங்களுக்கு ஒருவர்கூட துணைக்கு வரவில்லையே’ என்று. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கியபோது சுமந்திரன் தயாரித்த அந்த தீர்வுப் பொதியிலுள்ள விடயங்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச்சென்று விளக்கமளிக் கக்கூடிய யாரும் கூட்டமைப்பில் இல்லை என்பதையே அவர் கேள்விக்கு உட்படுத்தி ஆதங்கப்பட்டார்.

அவர் அப்போது சொன்னது எவ்வளவு யதார்த்தமானது என்பதைக்கூட அப்போது சுமந்திரன் புரிந்துகொண்டிருப்பாரோ தெரியவில்லை. இப்போதும் கட்சியிலோ அல்லது ஏன் அவரோடு கூட இருப்பவர்களோ அவர் செய்கின்ற எந்த விடயத்தையும் தர்க்கரீதியாக நியாயப்படுத்தி வாதிடக்கூடியவர்கள் அல்லர்.

இப்படித்தான் எவர் ஒருவருக்காக அல்லது அவர்களின் புகழ் பாடுவதற்காக ஊடகங்களைத் தொடங்குபவர்களும் முதலில் தம்மோடு சரியானவர்களை வைத்திருக்கவேண்டும்.

இப்படிச் செய்யாமல் ஊடகங்களை தொடங்குவதற்கோ அல்லது தொடர்ந்து நடத்துவதற்கோ நிதி உதவி செய்வதால் மாத்திரம் காரி யங்களை செய்துவிடமுடியாது. மேலே குதிரைக்கு சங்கேத மொழியைக் கற்றுக்கொடுத்தபோல தனது அரசியல் சீடர்களை வைத்தி ருந்தால் அது ஆபத்தில்தான் முடியும். –

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles