யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்தாக குறிப்பிட்டு குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு உள்ல நிலையில் மற்றுமொரு முறைப்பாடு தற்போது அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.