27.4 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகின் கலாசார பாரம்பரிய பட்டியலில் பிரான்ஸின் பக்கத் பாண்!

பிரான்ஸின் அடையாளமாக கருதப்படும் பக்கத் எனப்படும் நீண்ட குச்சிப்பாணுக்கு ஐக்கிய நாடுகளின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இன்று இடமளிக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற வாக்களிப்பில் இந்த தகுதிநிலை கிட்டியுள்ளது. பக்கத் என்ற தனித்துவமான பிரெஞ்சுப் பாணிண் தயாரிப்பில ஈடுபடும் வெதுப்பக கைவினைஞர்களின் அறிவு மற்றும் இந்தப் பாணை மையப்படுத்திய கலாசாரத்தை மையப்படுத்தி அதனை உலகின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க அதிகளவான வாக்குகள் கிட்டியிருந்தன. உலகெங்கும் பிரான்சின் ஒரு அடையாளமாக இருக்கும் பக்கத் பாண் குறைந்தது கடந்த 100 ஆண்டுகளாக பிரெஞ்சு உணவின் மையப் பகுதியாக இருந்து வருகிறது. பக்கத் பாண் பிறப்பு குறித்த கதைகளில் நெப்போலியன் போனபார்ட் குறித்த கதை முக்கியமானதாகும். போனபாட்டின் படையினர் சுலபமாக எடுத்துச் செல்வதற்காக இது நீளமான வடிவத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரான்ஸில் இப்போதும் தினசரி சுமார் 16 மில்லியன் பக்கத் பாண்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோதுமை மா, தண்ணீர், உப்பு மற்றும் புளிக்கவைக்கும் உயிரிகலவை ஆகிய பொருட்கள் மட்டுமே இதன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் போதிலும் 4 முதல் 6 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 15 முதல் 20 மணி நேரம் இதற்குரிய மா கலவை புளித்தால் மட்டுமே தரமான பக்கத் பாண் உருவாகும் என பிரான்ஸ் வெதுப்பகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பக்கத் பாண் உற்பத்தியாளர்களுக்கான போட்டி பிரான்ஸில் இடம்பெறும். ஐ.நா வின் கலாசார பாரம்பரிய பட்டியலில் ஏற்கனவே 130 நாடுகளைச் சேர்ந்த 600 பாரம்பரிய பொருட்கள் மற்றும் இடங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles