30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகின் மிகப்பெரிய எரிமலையில் வெடிப்பு : 2 இலட்சம் மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள மவுனா லோவா எரிமலையில் சுமார் 38 ஆண்டுகளின் பின் வெடித்துள்ளது. இதன் காரணமாக 2 இலட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவாய் தீவின் பரப்பளவில் சுமார் அரைப்பகுதியை இந்த எரிமலை உள்ளடக்குகிறது. உலகில் இயங்கு நிலையிலுள்ள மிகப் பொரிய எரிமலை இதுவாகும். பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலையில் வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருவதாகவும், எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ள ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு, தீவில் வசிக்கும் சுமார் 2 இலட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles