26.3 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பும் பரிசோதனை நிகழ்வும்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்தார்.
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் , கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நடவடிக்கையிலும் கலந்து கொண்;டார்.
கல்முனை மாநகர பிரதேசத்தை பசுமைத் திட்டங்களின் கீழ் உள்வாங்குவதன் அவசியம் மற்றும் பசுமை தரும் மரங்களை நடுவதன் ஊடாக மக்களுக்கான நன்மைகள் தொடர்பில் வலியுறுத்திய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்று கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் ஆலோசனைகளையும் வழங்கினார்.
பசுமைத் திட்டங்களின் கீழ் மாநகர சபை உள்ளிட்ட பல தரப்பினரை உள்வாங்கி பாதைகளின் நடுவில் மரங்களை நாட்டுதல் அவற்றை பேணுதல், கால்நடைகளிலிருந்து அவற்றைப் பாதுகாத்தல் என்பன தொடர்பிலும்
ஆராயப்பட்டது.
நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.றபீக், கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான
அலியார் றபீக், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் உட்பட பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles