ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுவது ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான முதலவாது நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுகின்றனர் என ரொய்;;ட்டர் தெரிவித்துள்ளது.
இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்களர்களில் 40 வீதமானவர்கள் பைடனையும் 40 வீதமானவர்கள் டிரம்பினையும் ஆதரிக்கின்றனர் என கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் நேரடி விவாதத்தின் பின்னர் பைடனி;ற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடி விவாதத்தின்போது தடுமாறியதை தொடர்ந்து பைடன் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சிகளை கைவிடவேண்டும் என 39 வீதமான ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பைடனிற்கு பதில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தகுதியானவர் என ரொய்ட்டர் முன்வைத்த பெயர்களில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவிற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.