27.3 C
Colombo
Saturday, May 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் பொலிஸ் மோதல் தொடர்கின்றது-வேர்ஜினீயாவில் 25 பேர் கைது

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை வேர்ஜினியா பல்கலைகழகத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை பொலிஸார் வேர்ஜினியா பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக தயாராகயிருக்கும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினர்.

அந்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடல் இடம்பெறுவதாக காவல்துறையினர் சமூக ஊடகங்களில் எச்சரித்தனர்.

இதன் பின்னர் பொலிஸார் உள்ளே நுழைந்தவேளை மாணவர்கள் இழுத்து நிலத்தில் விழுத்தப்பட்டனர் இழுக்கப்பட்டனர் அவர் கண்கணில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவம் தூவப்பட்டது என மாணவர்களிற்கு உதவிபுரிந்த ஆங்கில பேராசிரியர் ஒருவர் வோசிங்டன் போஸ்டிக்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் குறித்தே எங்கள் கரிசனைகள் காணப்படுகின்றன மாணவர்கள் பாதுகாப்பாகயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைகழகத்தின் கொள்கைக்கு விரோதமாக கூடாரங்களை மாணவர்கள் அமைத்துள்ளனர் என மாணவர்களிற்கு தெரியப்படுத்தினோம் அவற்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டோம் பொலிஸாரின் உதவியை நாடினோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் கடந்த வாரம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள்இடம்பெற்றுள்ளதுடன் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும் காசா யுத்தத்திற்கு ஆதரவாக செயற்படுவதை கைவிடவேண்டும் என கோரி பல்கலைகழக வளாகங்களில்  கூடாரங்களை  அமைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles