26.2 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புகைப்பிடித்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை

புற்றுநோய் உயிரிழப்புகளுக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள புகைப்பிடித்தலை தடுக்க இங்கிலாந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

நாட்டின் பொது நிதியுதவி பெறும் தேசிய சுகாதார சேவைக்கு (NHS) பெரும் சுமையாக இருக்கும் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் கடந்த திங்கட்கிழமை ‘புகை இல்லாத’ தலைமுறையை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆண்டு 15 வயதை எட்டியவர்கள் மற்றும் இளையவர்கள் புகையிலையை சட்டப்பூர்வமாக வாங்க முடியாது என்பதை உறுதி செய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

தற்போது, ​​18 வயதுக்குற்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோதமானது எனினும், தற்போது 2009, ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்த சகலருக்கும் புகைத்தலை தடை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 2040க்குள் இளைஞர்களிடையே புகைபிடித்தல் ஒழிக்கப்படும் என்று அரசாங்கம் கருதுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கடைகள் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்கப்பட்டால் 100 பவுண்டுகள் ($125) அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles