28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம்

காஸா போருக்கு பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இத்திட்டம், கேபினட் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க எந்த அம்சமும் இல்லாவிட்டாலும், போருக்குப் பிந்தைய முறையான பார்வையை நேதன்யாகு முதன்முறையாக முன்வைத்திருக்கிறார். இந்த திட்டத்தில், காஸாவை நிர்வகிப்பதில் இஸ்ரேலிய பங்கை நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, ஹமாஸ் மீதான போர் முடிவடைந்த பின்னர் இஇராணுவம் விலக்கப்பட்ட காஸா முனையின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், சிவில் விவகாரங்களில் இஸ்ரேல் பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காஸா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் சுதந்திரமாக செயல்படும். மேலும், காஸாவுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது. 

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடமிருந்து நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காஸா நிர்வகிக்கப்படும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles