மட்டக்களப்பு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் சிரமதானப்பணி இன்று காலை இடம்பெற்றது. சிரமதானப் பணியில் காத்தான்குடி சிறுவர் இல்ல மாணவர்கள் ஈடுபட்டனர்.
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல்.றுபைத் மற்றும் முகாமையாளர் எப்.எம்.மஜீட்டின் வழிநடத்தலில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரையில் காணப்பட்ட கடதாசிகள், புற்கள் என்பவற்றை மாணவர்கள் துப்பரவு செய்தனர்.