இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்போது, “நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது. இது இலங்கையில் உள்ள சமூகங்களை துருவப்படுத்தக் கூடிய செயற்பாடாகும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.