கண்டி ரயில் நிலையத்தினுள் ரயிலில் மோதுண்டதில் ஊழியர் ஒருவர் இன்று (3) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்
ரயில்வே திணைக்களத்தில் பணிப் பரிசோதகராகப் பணிபுரிந்த ஸ்ரீ லால் பிரேமரத்ன (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பேராதனையில் இருந்து கொழும்பு கண்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் வந்தபோது, தேநீர் அருந்துவதற்காக ரயில் நிலையத்தின் சிற்றுண்டி சாலைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு ரயில் பாதைக்கு மாறியபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
விபத்தில் படுகாயமடைந்த ரயில் ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.