வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரித்து மட்டக்களப்பு ஏறாவூரில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளர் ஏ.எம்.பிர்தௌஸ் தலைமையில், ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் தேசியக்கொடியை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன்,மட்டக்களப்பு நகரம் நோக்கியும்
நகர்ந்தனர்.