28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

400ஆவது ஒருநாள் போட்டியில் தீர்ப்பாளர் மடுகல்லேவுக்கு ஐசிசி கௌரவிப்பு

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாதுவம் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது ரஞ்சன் மடுகல்லே தீர்ப்பாளராக கடமையாற்றும் 400ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டிய முதலாவது போட்டி தீர்ப்பாளர் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே ஆவார்.இதனை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் பேரவை நினைவுச் சின்னம் வழங்கி அவரை கௌரவித்தது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ரஞ்சன் மடுகல்லேவுக்கு பெய்ல்கள் வடிவிலான நினைவுச் சின்னத்தை ஐசிசி சார்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஞ்ஷலி டி சில்வா வழங்கினார்.இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

ரஞ்சன் மடுகல்லேயின் இந்த மைல்கல் சாதனையையிட்டு சர்வதேச கிரிக்கெட் பேரவை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான ரஞ்சன் மடுகல்லே இலங்கை அணியினதும் முன்னாள் தலைவராவார். அவர் 21 டெஸ்ட் போட்டிகளிலும் 63 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

216 டெஸ்ட் போட்டிகள், 163 ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள், 14 மகளி;ர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 8 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் போட்டி தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லே பணியாற்றியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles