30 C
Colombo
Sunday, November 10, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நிக்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 13 பேர் பலி

மின்சார வாகன மின்கல உற்பத்தியில் நிக்கல் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

நிக்கல் கனிம உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள இந்தோனேசியாலவின் சுலவிசி தீவில் சீன நிறுவனத்தின் நிதி உதவியில் நிக்கல் தொழிற்சாலையொனறு இயங்குகின்றது. இத்தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வெடிவிபத்தில் தொழிற்சாலையின் 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தொழிற்சாலையில் பழுதுநீக்கும் பணியின்போது இவ்விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles