30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் தன்னைச் சீண்ட முடியாது – ஆளுநர் ஆனந்தா போஸ்

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னைச் சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி மம்தா மீதும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கெல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம்.

யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது.
அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன்.
அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.


Related Articles

- Advertisement -spot_img

Latest Articles