பங்களாதேஷிலுள்ள இந்தியப் பிரஜைகளை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற விடயங்களுக்காக விடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
பங்களாதேஷிலுள்ள இந்தியத் தூதரகம் குறித்த அறிவிப்பைப் பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன் பங்களாதேஷிலுள்ள இந்திய மாணவர்கள் பாதிக்கப்ப்டால் அது தொடர்பில் அறிவிக்க 24 மணித்தியாலங்களும் சேவை வழங்கும் தொலைபெசி இலக்கங்களையும் பங்களாதேஷிலுள்ள இந்தியத் தூதரகங்கள் அறிவித்துள்ளன.
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும் நிலையில்
படைவீரர் இடஒதுக்கீட்டு முறை பாரபட்சமாக உள்ளதாகத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டுத் தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்திற்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே பங்களாதேஷின் டாக்காவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றுpக்கு அருகில் மாணவர்கள் இன்று வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.