இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111ஆவது ஜனன தினம் இன்று கொழும்பிலும் மற்றும்
மலையகப் பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்படக் கட்சி பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமாக சௌமியபவனில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.