28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை பாண்டிருப்பில், புதையல் தோண்டி குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

அம்பாறை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடொன்றில், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ம் திகதி புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர், கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதி முன்னிலையில், முற்படுத்தப்பட்ட வேளை, அவர்களை செப்டம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நேற்றைய தினம், கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் வியாழக்கிழமை வரை, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து, விசாரணைகளுக்குட்படுத்துமாறு, நீதிவான் உத்தரவிட்டார். கைதானவர்கள் 28 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட பாண்டிருப்பு, மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவருகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles