30 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாணவ தூதுவ விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம்

மாணவ தூதுவ விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் நடைமுறையாக்கம்
தொடர்பில், மட்டக்களப்பில் மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி பிள்ளை நேய சூழலை உருவாக்கும் விதத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்
தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாணவ தூதுவ விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிகரா றியாஸ் மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் சு.பிரபாகர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இன்றைய மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பாடசாலைகளின் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் என பலரும் இதில் பங்குகொண்டனர். வளவாளர்களாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய சகாய தர்ஷினி மற்றும் உளநல வைத்திய நிபுணர் கமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles