சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது. கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.