28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேசிய கட்சியொன்றின் வேட்பாளரை ஆதரிப்பதன் ஊடாக மாத்திரமே பயனடையலாம் -ரிஷாத் பதியூதீன்

தேசிய கட்சியொன்றின் வேட்பாளரை ஆதரிப்பதன் ஊடாக மாத்திரமே பயனடையலாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என்று 26 சதவீதம் வாழ்கின்றோம். இந்த 26 சதவீதமாகவுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் தேசிய ரீதியாகவுள்ள தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளரை ஆதரிப்பதன் ஊடாக மாத்திரம்தான் ஒரு பயனை அடையலாம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்து சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் நான் ஜனாதிபதியாக வந்தேன் என்று மார்பு தட்டிப் பேசினாரோ, ஒரு இனவாதியாக செயற்பட்டாரோ அவ்வாறு இன்னுமொரு ஜனாதிபதி இந்த நாட்டில் உருவாகிவிடக் கூடாதென்றால் சிறுபான்மைச் சமூகம் எல்லோரும் ஒன்றுபட்டு தேசிய கட்சியில் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக மாத்தரம்தான் நன்மைகளை அடைய முடியுமே ஒழியே, நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் பிரிந்து நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல.

ஆதலால், எமது காலத்தை வீணடித்து சிறுபான்மை இனங்களின் பொது வேட்பாளர் என்று எமது மக்களின் வாக்குகளின் பெறுமதியை இல்லாமற்செய்கின்ற பிழையான முடிவாக போய்விடும். இவ்வாறு இருக்கின்ற நிலையில் சிறுபான்மை இனங்களின் பொது வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பதற்கு காரணம் இருக்கின்ற நிலையில் அந்த வேட்பாளர் வடக்கா, கிழக்கா, தெற்கா என்று பேசிக்கொள்வதில் பயனடைய முடியாது என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles