எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்றைய தினமும் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும்
வேட்புமனுத் தாக்கல் செய்தன. ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பசீர் சேகுதாவூத் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்களைக் கைளித்தது. ஜனநாயக தேசிய கூட்டணி தபால்பெட்டி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில்
வேட்புமனுத் தாக்கல் செய்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி எஸ்.அருண்தம்பிமுத்து தலைமையில் வேட்புமனு
தாக்கல் செய்திருந்தது. பொதுஜன பெரமுன சார்பில் ரொசான் அமிந்த ஜயசிங்க தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி நா.விஸ்னுகாந்தன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.எல்.ஏம்.எம். ஹிஸ்புல்லா தலைமையில் வேட்புமனுக்களைக் கையளித்தது.
புதிய ஜனநாயக முன்னணி சி.சுதர்சன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, சர்வஜன பலயே கட்சி மொகமட் சாபில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.