மட்டக்களப்பு மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தின்ஒழுங்கமைப்பில் பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டி நடைபெற்றது

0
76

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தலைமையில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.


கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.


மண்முனைமேற்கு பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட 14 விளையாட்டு கழகங்களின் வீரர்கள் தமது திறமைகளை
வெளிப்படுத்தும் முகமாக சுவட்டு மைதான விளையாட்டுக்கள், கூடைப்பந்து, கிரிக்கட், கபடி, கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் கலந்து கொண்டனர்.


இப்போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதலாம் இடத்தினை ஈச்சந்தீவு உதய சூரியன் விளையாட்டு கழகமும், கன்னங்குடா உதய தாரகை விளையாட்டு கழகம் 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. விளையாட்டு நிகழ்விற்கு அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
இதன் போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பரிசிக்களும் வெற்றிக் கிண்ணங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.