29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் முட்டை உற்பத்தியிலும் மாஃபியா!

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்த தீர்மானத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் பாராட்டியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மாற்றியமைப்பதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், அதிகார சபையிடம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நுகர்வோர் அதிகாரசபைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சங்க உறுப்பினர்கள் கடந்த வாரம் அதிகாரசபைக்கு விஜயம் செய்து முட்டை, பிஸ்கட், சவர்க்காரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விலைக் கட்டுப்பாட்டை விதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முட்டை விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும், வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பிரதமரை இன்று சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரிசி தொடர்பான 13 வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டார், அவை இறுதியில் தலைகீழாக மாற்றப்பட்டன.

இது குடிமக்களின் ஊட்டச்சத்தின் பிரச்சினை என்றும், முட்டை ஒரு மலிவு விலையில் சத்தான உணவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய மாஃபியா முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles