28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நச்சுப் புகையை சுவாசித்ததால் 50 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

முன்னணி பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் பலர் நச்சுப் புகையை சுவாசித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நகரிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவின் கல்வி பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையைச் சுற்றியுள்ள வீடு அல்லது இடமொன்றில் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை காரணமாக மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles