31.1 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயிற்றுவிப்பாளர்களுக்கான விளையாட்டு
டிப்ளோமா கற்கை நெறிக்கான பயிற்சி நெறி

தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி மூலமாக நடத்தப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான தேர்வு பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறிக்கான பயிற்சி நெறிகள் நாடத்தப்பட்டு வருகின்றன.

பாடசாலை விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான விளையாட்டு டிப்ளோமா கற்கை நெறிக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.வினோஜா ஒருங்கிணைப்பில், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான விரிவுரையாளரும் ,சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தின் தரம் இரண்டு பயிற்றுவிப்பாளருமான செல்லத்துரை
ஜெகனேந்திரனின் விரிவுரையில் பாடசாலை விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர் டிப்ளோமா கற்கை நெறிக்கான பயிற்சி நெறி; நடைபெற்றது .

டிப்ளோமா கற்கை நெறிக்காக விரிவுரைகளை வழங்கிய விரிவுரையாளர் விளையாட்டு விஞ்ஞான மாணி பட்டத்தினை இங்கிலாந்திலும்,கலாநிதி பட்ட படிப்பினை நியூசிலாந்தில் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles