பிரேசிலின் சான்டா கேடரினா மாகாணத்தில் சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், இது இட்டாபோவா நகரை நெருங்கியதும், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது, விமான நிலையத்திற்கு அப்பால் உள்ள மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கவர்னர் வல்லடரேஸ் நகரில் இருந்து நேற்று சாண்டா கேடரினா தலைநகர் புளோரியானோபோலிஸ் நகருக்கு புறப்பட்டது.தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.விமானி ஏன் ஜாயின்வில்லி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க முயன்றார்? விமானப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்