மட்டக்களப்பு காத்தான்குடியில், டெங்கு தடுப்பு செயலணியின் தீர்மானத்துக்கமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளரும் காத்தான்குடி டெங்கு ஒழிப்பு செயலணியின் தலைவருமான உதய சிறீதர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நசிர்தீன் ஆகியோரது வழிகாட்டலில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, டெங்கு விழிப்பூட்டல் கூட்டமொன்றும்
இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஐ.எம்.ரஹ்மத்துல்லா உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர்.