30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிறையிலுள்ள இந்திய மீனவர் விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மனு

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவொன்றை கையளித்ததாகவும் மீனவர் பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை கச்சத் தீவை திமுக தாரை வார்த்ததாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாமெனவும் செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என்றும் அவர் கூறியுள்ளார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles