மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் 2022 ஆண்டுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் தவதிருமகள் தலைமையில் இன்று நடைபெற்றது. அதிதிகள் மாணவிகளினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றப்பட்டு வரவேற்பு நடனத்துடன் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.
பரிசளிப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பாடவிதான செயல்பாடுகள், பரீட்சைகள், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ள மாணவர்களை கௌரவிக்கும் வகையில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு சவால் கிண்ணமும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.
அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ஹரிகரராஜ், வைத்திய நிபுணர் வைத்தியர் திருக்குமார் உட்பட ஓய்வு நிலை பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , கல்விப்பணிப்பாளர் , அயல் பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்