ஜனாதிபதியின் பிரித்தாளும் வலையில் சிக்காது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு கதிரவெளியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கதிரவெளியில், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினர்களும், கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.