ஜே.வி.பியின் நிறுவுநர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிது விஜேவீர புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் ‘இரண்டாம் தலை முறை’ என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கட்சி உள்ளிட்ட ஏழு புதிய கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.